போலியான வணிகப் பரிவர்த்தனைகளை பதிவு செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி.
ட்ரம்புக்கான தண்டனை விவரங்களை மன்ஹாட்டன் நீதிமன்றம் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கிறது.
தண்டனை விவரங்களை அறிவிக்கும் வரை ட்ரம்புக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
முதல்முறையாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர், வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2016 தேர்தலுக்கு முன் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாக 34 மோசடி வழக்குகள்.
நடிகைக்கு பணம் கொடுத்ததை சட்டச் செலவுகள் எனப் பதிவிட்டதால் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு.
தன்னுடனான உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியே பேசாமல் இருப்பதற்காக ட்ரம்ப் பணம் கொடுத்ததாக புகார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடவுள்ள நிலையில் குற்றவாளி என தீர்ப்பு.