
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குத்தனூர் மாடம்பாக்கம் கிராமத்தில் எவர் பிரைட் மழலையர் பள்ளியின் 22 ஆம் ஆண்டு விழா கடந்த 05-04-2025 அன்று மாடம்பாக்கத்தில் உள்ள VSR மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மணிமங்கலம் காவல்துறை அதிகாரி திரு. ஜி.அசோகன், நடிகர் திரு. பிர்லா போஸ், செய்தி வாசிப்பாளர் திருமதி. சுஜாதா பாபு, பள்ளி தாளாளர் திரு. என். இளங்கோவன் மற்றும் சீனியர் அகாடமிக் அட்வைசர் மிஸ்டர் ஜாய் ஜோசப் டேவிட், மாடம்பாக்கம் திருவள்ளுவர் கலை இலக்கிய மன்ற தலைவர் E.திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை அதிகாரி, நடிகர், செய்தி வாசிப்பாளர், கல்வியாளர், பள்ளி தாளாளர் ஆகியோர் தேர்வு இப்பள்ளியின் பெருமையை உணர்த்துகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்து வெற்றிபெற வேண்டும் என்று பேசினார்கள்.
ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் திருக்குறள் நாடகம், யோகா, நடனம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் தங்கள் பள்ளியில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினார்கள்.

இப்பள்ளியின் நோக்கம் கல்வி மட்டும் அல்லாமல், GENERAL KNOWLEDGE, ATTITUDE, SKILLS போன்றவற்றையும் சேர்த்து சிறப்பான ஆசிரியர்களை கொண்டு ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் இது போன்ற செயல்களிலும் சிறந்து விளங்க செய்வதும் மாணவர்களை உருவாக்குவது ஆகும். முடிவில் பள்ளியின் நிர்வாகி திரு. முருகேசன் அவர்களும் பள்ளியின் முதல்வர் திருமதி. லயன் எம்.கீதா முருகேசன் நன்றியுரை கூறினார்கள். விழா இனிதே சிறப்புடன் நிறைவுற்றது.
குறிப்பு: பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவரங்களுக்கு பள்ளியை அணுகவும்.
-எம்.பாலசுப்பிரமணியன், செய்தியாளர்