
ஜோலார்பேட்டை வட்டாரம் பெரிய மோட்டூர் பஞ்சாயத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் தொடக்க விழா ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் எம்எல்ஏ அவர்கள் தொடங்கி வைத்து விவசாயிகளிடம் உரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் உமா கன்னுரங்கம் அவர்கள் முன்னுரை வழங்கினார். நவீன் குமார் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜோலார்பேட்டை அவர்கள் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரை தொடர்ந்து வெற்றிவேந்தன் கரும்பு சாகுபடி அலுவலர் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் பற்றி எடுத்துரைத்தார். பிறகு தணிகை மணி உதவி தோட்டக்கலை அலுவலர் துறை சார்ந்த மாநில திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். மகேந்திரன் உதவி வேளாண் பொறியாளர் துறை சார்ந்த மானிய திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். ரவிக்குமார் கால்நடைத்துறை மருத்துவர் அவர்கள் கால்நடைத்துறை சார்ந்த மாநில திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். சதீஷ் வேளாண்மை அலுவலர் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். செல்வம் பாலார் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் தென்னை சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். விசுநாதன் இயற்கை விவசாயி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
வெங்கடேஸ்வரன் துணை வேளாண்மை அலுவலர் அவர்கள் நன்றி உரை அளித்தார். சந்திப் கிராம நிர்வாக அலுவலர், பிரபு உதவி வேளாண்மை அலுவலர், மேரி வீனஸ் வட்டார தொழில்நுட்ப மேலாளர், ஸ்ரீநாத், நேசமணி உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
– Mohan