
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த நமோ செயலி ஆய்வில் அனைவரும் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த பொதுமக்களின் எண்ணங்கள் தொடர்பான ஆய்வில் அனைவரும் பங்கேற்கும் இணையதளத்தை திரு மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“உங்களுடைய கருத்துக்கள் மிகவும் முக்கியம்! நமோ செயலி ஆய்வில் பங்கேற்கவும். கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த உங்கள் கருத்தை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.