
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பேசிய அவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆலங்காயம் ஊராட்சியில் நெக்னாமலையில் பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.30 கோடி மதிப்பில் 7 கிலோ மீட்டர் தார் சாலை அமைக்கப்படும்.
குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா பகுதியில் 5000 பேர் வேலைவாய்ப்பு பெறும் விதமாக 280 ஏக்கர் பரப்பளவில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தோல் பொருட்கள் அல்லாத புதிய காலணி உற்பத்தி சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி வணிக வாளகம் அமைக்கப்படும்.
ஆம்பூர் மக்கள் பயன்பெறும் வகையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
– S.Mohan