
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட தாசிரியப்பனூர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தினந்தோறும் திம்மாம்பேட்டை காவல் துறையினர் காலை மற்றும் மாலை வேளைகளில் சுழற்சி முறையில் ஆய்வுப் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்று வருகிறது.
மதிப்பிற்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்ற பள்ளிகளிலும் காலை மாலை இரு வேளையும் காவல் துறையினரை பள்ளி வளாகத்தில் முகாமிட உத்தரவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
– S.Mohan