
திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா ஊராட்சி மக்களின் மனநிலை என்ன..?
சம்பந்தப்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சிப்காட் அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு ஆய்வுப் பணிகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தது பேசு பொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் மக்கள் சிலர் கூறும்போது : இந்த அரசு புறம்போக்கு நிலங்களில் தாங்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வயிற்றைக் கழுவி வருகிறோம் என்றும் இந்த இடத்தில் சிப்காட் அமைக்கவுள்ளோம் இதற்கு உள்ளூர் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க அரசு ஏன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை என்றும் எந்தவொரு முயற்சியையும் அறிவிப்பையும் கொடுக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இனியும் அரசு சார்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நில அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடும் பட்சத்தில் தாங்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பகிரங்கமாக தற்கொலை செய்து கொள்ளவும் தயங்க மாட்டோம் என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-S.Mohan