மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (02.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் திட்டங்கள், நலத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், துறையின் தற்போதைய செயல்பாடுகள், பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்கும் நடைமுறைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
