18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல வன உயிரினங்கள் குறித்த திரைப்படங்களை இயக்கி வரும் திரு சுப்பையா நல்லமுத்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “காட்சிகளைப் பதிவு செய்வது எளிது. ஆனால் எல்லாக் காட்சிகளும் ஒரு கதையைச் சொல்லாததால் சுவாரசியமான கதையைக் கண்டறிவது கடினம்” என்று திரு சுப்பையா நல்லமுத்து கூறினார்.
வன உயிரின திரைப்பட உருவாக்கத்தில் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “என்னைப் பொறுத்தவரை எந்தவொரு கதைநாயகனையும் விட, கதையம்சம்தான் உண்மையான கதாநாயகன்” என்று கூறினார்.
தனது படைப்புகளுக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட திரு சுப்பையா நல்லமுத்து, புலிகளின் பிரமிப்பூட்டும் பயணத்தை மையமாகக் கொண்ட தனது முதல் லட்சிய திரைப்படம் குறித்த தகவலை வெளியிட்டார். இந்தப் புதுமையான படம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காடுகளில் படம்பிடிக்கப்பட்ட புலிகளின் உண்மையான காட்சிகளை கதையுடன் ஒருங்கிணைக்கும், இது இந்தி சினிமாவில் ஒரு முன்னோடி தருணத்தைக் குறிக்கும் என்று அவர் கூறினார். வன உயிரின திரைப்பட கதைகளத்திற்காக அதன் தனித்துவமான அணுகுமுறை, ஊக்கமளிக்கும் பாடல்கள் மற்றும் அதிரடி காட்சிகளை சேர்ப்பதன் மூலம் அடிமட்ட மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை வசீகரிப்பதை இந்தப் படம் நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார் அவர். “நாங்கள் உண்மையான காட்சிகளை ஒரு பொழுதுபோக்கு கதை சொல்லல் வடிவத்தில் முன்வைக்கிறோம். திரு குல்சார், திரு சாந்தனு மொய்த்ரா மற்றும் திரு தர்ஷன் குமார் போன்ற தொழில்துறை பிரபலங்கள் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று நல்லமுத்து கூறினார்.
-PIB