சினிமா துறையில் நடிகராக ஆகவேண்டும் என்ற கனவோடு மாநிலத்தின் கடைக்கோடியிலிருந்து சென்னைக்கு வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்-களின் பலபேருடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. குறித்த நேரத்திற்குள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்து, அவரவர் சொந்த உடை, அலங்காரத்தைக் கொண்டு, ஒரு நாள் முழுவதும் அங்கு எடுக்கக்கூடிய சீனின் (Scene) சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிக்கவேண்டும். அவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் என்னவோ 500 முதல் 700 வரைதான். இந்த சம்பளம்த்தை வைத்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு போகக்கூட கட்டுபடியாகாத நிலை. இதில் பெண்களின் நிலை மிகக் கொடுமை.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்-க இருப்பவர்கள் வேறு எந்த வேலைக்கும் போகமுடியாமல் மொத்தமாக சினிமாவை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும், தினக்கூலி வேலையாக ஒரு நாள் போனாலும், அப்போதுதான் போன் செய்து, “சூட்டிங் இருக்கு உடனே வறவேண்டும்” என்று கூப்பிடுவார்கள். இதனால் முழுக்க முழுக்க சினிமாவை நம்பியே இருக்கவேண்டிய சூழ்நிலை.
ஆனால், சினிமாவில் அவங்களுக்கு கிடைப்பது என்னமோ ஏமாற்றம்தான். இந்த ஏமாற்றத்தை ஏத்துக்க முடியாம பலபேர் சினிமா விட்டு ஓடி இருக்காங்கன்னு சொல்லலாம் இன்னும் சிலபேர் தனக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கைல பல வருஷமா போராடிக் கொண்டு இருக்கிறார்கள். சூட்டிங் இடத்தில் அவர்களை மிகக் கேவலமாக நடத்துவது கொடுமையிலும் கொடுமை. இருந்தாலும், தன்னுடைய முகம் திரையில் தெரியாதா! தனக்கு ஒரு வசனம் கொடுத்துவிட மாட்டாங்களா? அப்படிங்குற ஏக்கமும், எதிர்பார்ப்புதான் காரணம்.
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் சீரியலின் சூட்டிங் 19.06.2024 அன்று நடைபெற்றது. அன்று நடிக்க வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வேலை இல்லாத நேரத்தில் உட்கார்ந்து இருந்ததாக கூறி, அவர்களை அடித்தும், பெண்களை பார்த்து, “Sex படத்துக்கா நடிக்க வந்திங்க. பல்ல காட்டிட்டு இருக்கிங்க” என்று அசிங்கமான வார்த்தைகளை கொண்டு திட்டியும், அவமானம்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்களை அடிப்பதை வீடியோ எடுத்தவரை போனை வாங்கி Delete செய்து மிரட்டியுள்ளார்கள். இதேபோன்று வேறு முதன்மை நடிகருக்கோ இல்லை அங்கு வேலை செய்யும் டெக்னிஷங்களுக்கோ இதுபோல் நிகழ்வு நடந்திருந்தால் அவர்களுக்கு என தனி சங்கம் அவர்களுக்காக குரல்கொடுக்கும். ஆனால், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பல கொடுமைக்கு ஆளாகும் நிலைதான் உள்ளது.
-வெளியீட்டாளர், சிவசங்கர்