மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லாஜே ஆகியோர் நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் வளர்ச்சிக்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தும் திட்டங்களை ஆய்வு செய்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இக்கூட்டத்தில் அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காதி தொழில் துறையில் உள்ள கைவினைஞர்களுக்கு ஆதரவளிப்பதை அதிகரிக்கவும், அதை விரிவுபடுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
-PIB