திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வர்ணம் பூசும் பணிகள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் லதா, உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட எஸ்பியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் வரவேற்றார்.
-S.Mohan