காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், குத்தனூர்–மாடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள எவர் பிரைட் மழலையர் பள்ளியின் 23ஆம் ஆண்டு விழா கடந்த 28.03.2026 அன்று மாடம்பாக்கம் VSR மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மணிமங்கலம் காவல்துறை அதிகாரி திரு. G. சுந்தர், சன் நியூஸ் பத்திரிகையாளர் செல்வி அபிநயா சுப்பிரமணியம், கிருஷ்ணா கல்லூரி முதல்வர் டாக்டர் A. அன்புதாசன், Ln. டாக்டர் ஆறுமுகம் குருசாமி, பள்ளி தாளாளர் திரு. N. இளங்கோவன், சீனியர் அகாடமிக் அட்வைசர் திரு. ஜாய் ஜோசப் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாடம்பாக்கம் திருவள்ளுவர் கலை இலக்கிய மன்ற தலைவர் திரு. E. திருநாவுக்கரசு, திரு. ஆரோக்கிய பிரிட்டோ, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் திரளாக பங்கேற்றனர்.


பல்வேறு துறைகளைச் சேர்ந்த விருந்தினர்கள் கலந்து கொண்டது, இப்பள்ளியின் வளர்ச்சி மற்றும் கல்வி தரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் விருப்பத்துறையைத் தேர்வு செய்யும் வகையில், ஒவ்வொரு விருந்தினரும் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. திருக்குறள் நாடகம், நடனம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.



இப்பள்ளியின் நோக்கம் கல்வி மட்டுமல்லாமல், பொதுஅறிவு (General Knowledge), அணுகுமுறை (Attitude), திறன்கள் (Skills) ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களை முழுமையான நற்பண்புகளுடன் உருவாக்குவதாகும். திறமையான ஆசிரியர்கள் வழிநடத்தும் இப்பள்ளி, ஏட்டுக் கல்வியுடன் இணைந்து செயல்முறை கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வழிவகுக்கிறது.


இறுதியாக, பள்ளி நிர்வாகி திரு. முருகேசன் மற்றும் பள்ளி முதல்வர் திருமதி லயன் எம். கீதா முருகேசன் நன்றியுரை வழங்கினர். இதன் மூலம் விழா இனிதே நிறைவுற்றது.
குறிப்பு: பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் தகவல்களுக்கு பள்ளியை தொடர்பு கொள்ளவும்.
செய்தியாளர்
எம். பாலசுப்பிரமணியன்
