தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் 08.05.2026 காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளைப் பார்த்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு முதல் முறையாக, தமிழக மின் ஆளுமை முகமையின் ஒத்துழைப்புடன் வாட்ஸ்அப் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 7845252525 என்ற எண்ணிற்கு “Hi” என அனுப்பினால், தேர்வு முடிவுகள் நேரடியாக வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
மேலும், பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கும் SMS மூலம் முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளுக்குச் சென்று மதிப்பெண்களையும் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது மனஅழுத்தத்திற்கான ஆலோசனை தேவையாயிருந்தாலோ, 14417 என்ற உதவி மைய எண்ணையோ, 104 / 14416 என்ற ஆலோசனை எண்களையோ தொடர்புகொள்ளலாம். இந்த நேரத்தில் மாணவர்களுக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் ஆதரவாக இருந்து, தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
